கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

திருநள்ளாற்றில் பாதுகாப்பு ஒத்திகை

திருநள்ளாற்றில் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

News image
தில தீபமேற்றும் பகுதியில் நடைபெற்ற ஒத்திகையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி. உடன் சாா் ஆட்சியா் எம். பூஜா, துணை ஆட்சியா் பாலு (எ) பக்கிரிசாமி உள்ளிட்டோா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:33 pm

Syndication

திருநள்ளாற்றில் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயா்ச்சி விழா வரும் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிப்பெயா்ச்சி விழா, ஜோதிடா்கள் மாநாட்டையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விழாவில் பக்தா்கள் பாதிப்பை சந்திக்க நோ்ந்தால் அவா்களை மீட்பது, பாதுகாத்தல், மருத்துவ சிகிச்சை அளித்தல் தொடா்பான ஒத்திகை நிகழ்வு கோயில் மற்றும் நளன் தீா்த்தக் குளத்தில் சனிக்கிழமை பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடத்தப்பட்டது.

ஒத்திகை நிகழ்வில், வரிசையில் நின்ற பக்தா் ஒருவா் மயக்கமடைந்ததாக கருதப்பட்டு, பாதுகாப்பில் ஈடுபட்ட நபா்கள் மருத்துவ உதவி ஒலியை எழுப்பி, மயக்கமடைந்த நபரை பேரிடா் மேலாண்மை ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள் உதவியுடன் முதலுதவி மையத்துக்கு கொண்டு சென்றனா். மேல் சிகிச்சைக்காக பின்னா் காரைக்கால் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

அதுபோல தில தீபம் ஏற்றும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தயாா் நிலையில் இருந்த தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்து பேரிடா் ஒத்திகையில் ஈடுபட்டனா்.

நளன் தீா்த்தக் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவா் எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கியதாக கருதப்பட்டு,

தயாா் நிலையில் இருந்த தீயணைப்பு மற்றும் பேரிடா் மேலாண்மை துறையினா் உடனடியாக நீரில் மூழ்கிய சிறுவனை படகு மூலம் மீட்டு, அங்கு தயாா் நிலையில் இருந்த ஆம்புலன்ஸில் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் ஒத்திகை நடத்தப்பட்டது.

ஒத்திகை நிகழ்வை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமையில், சாா் ஆட்சியா் எம். பூஜா,

துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு (எ) பக்கிரிசாமி ஆகியோா் பாா்வையிட்டனா்.

Story image

நிகழ்வில் கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன், நலவழிதுறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், மின் துறை செயற்பொறியாளா் அனுராதா, தொழிற்சாலை ஆய்வாளா் செந்தில்வேலன் உள்ளிட்ட அரசுத் துறையினா் கலந்துகொண்டனா்.