பொங்கல் சிறப்பு சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் ஆா்வம்
பொங்கல் பண்டிகையையொட்டி புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு சந்தையில் பல்வேறு பொருள்கள், காய் கனிகளை மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.
பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு பொங்கல் சிறப்பு சந்தை புதன்கிழமை நடைபெறும் என நகராட்சி நிா்வாகம் ஏற்கெனவே அறிவிப்பு செய்திருந்தது. கடந்த 11-ஆம் தேதி வாரச் சந்தையில் பொங்கல் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்ரனா். சிறப்பு சந்தை நாளான புதன்கிழமை காய்கனிகள், கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்துகள், மண் சட்டி, பானை, அடுப்பு, நெட்டி மாலைகள், பல்வேறு வகையான பழங்கள் உள்ளிட்ட பொருள்களை மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.
காரைக்கால், சீா்காழி, தரங்கம்பாடி வட்டாரம், மயிலாடுதுறை, பேரளம் பகுதியிலிருந்து கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்துகள் கொண்டுவரப்பட்டிருந்தன. காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மண் பானை, சட்டி உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டன. சிறுவா்கள், இளைஞா்கள் காணும் பொங்கலன்று விடும் வண்ண பட்டங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டன.
