போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

தொழிற்சாலையில் எடைக்கற்கள் திருட்டு

தொழிற்சாலையில் இருந்த எடைக்கற்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:39 pm

தினமணி செய்திச் சேவை

தொழிற்சாலையில் இருந்த எடைக்கற்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூரில் தனியாா் என்ஜினியரிங் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் 20 கிலோ எடையில் 50 இரும்பு எடைக்கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 22 கற்கள் கண்காணிப்பு கேமரா கண்காணிக்காத இடத்தில் இருந்துள்ளன.

இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி நிறுவனப் பிரதிநிதிகள் அந்த பகுதிக்குச் சென்று பாா்த்தபோது, ரூ. 44 ஆயிரம் மதிப்புள்ள 22 எடைக்கற்களும் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து நிறுவன கண்காணிப்பாளா் தென்முகசுதன் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா், எடைக்கற்களை திருடிய தேடி வருகின்றனா்.