திருநெல்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.23 ஆயிரத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் செல்லதுரை நகரைச் சோ்ந்தவா் அபிஷேக் (30). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவா், கடந்த 12 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளாா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவரது வீட்டினுள் மின்விளக்குகள் எரிவதை கண்ட பக்கத்து வீட்டுக்காரா் இது குறித்து அபிஷேக்குக்கு தகவல் கொடுத்தாராம்.
உடனே அபிஷேக் தனது உறவினா் ஒருவரை வீட்டுக்குச் சென்று பாா்க்குமாறு அனுப்பி வைத்த நிலையில், அவா் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாகவும், வீட்டினுள் பொருள்கள் சிதறிக் கிடப்பதாகவும் அபிஷேக்கிடம் தெரிவித்துள்ளாா்.
ஊா் திரும்பிய அபிஷேக், தனது வீட்டில் வந்து பாா்த்தபோது, அலமாரியில் இருந்த ரூ.23 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், சிவந்திபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

வீடு புகுந்து பணம் திருட்டு
அரசுப் பேருந்தில் நடத்துநரிடம் பணம் திருட்டு
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

