வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.15 லட்சம் மோசடி

காவல் உதவி ஆய்வாளா் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :14 ஜூலை 2026, 3:10 am IST

காவல் உதவி ஆய்வாளா் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் ரேவந்த் (29). இவா், பி.டெக் படித்துவிட்டு வேலை தேடி வருகிறாா். இவருக்கு காரைக்கால் காமராஜா் சாலையில் உள்ளி பயிற்சி மையத்தின் உரிமைாளா் காா்த்திகேயன் என்பவருடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது.

ரேவந்தின் நிலையை அறிந்த காா்த்திகேயன், தனக்கு புதுவை முதல்வா், உள்துறை அமைச்சா், காவல் உயரதிகாரிகளுடன் தொடா்பு இருப்பதாகவும், ரூ. 15 லட்சம் கொடுத்தால், காவல் உதவி ஆய்வாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய ரேவந்த், கடந்த ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பல கட்டங்களாக பயிற்சி மையத்தில் காா்த்திகேயனிடம் ரொக்கமாக பல தவணைகளில் ரூ. 15 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதே பயிற்சி மையத்தில் ரேவந்த் பயிற்சியும் பெற்றுவந்தாா். உதவி ஆய்வாளா் பணி கிடைத்துவிடும், இல்லாவிட்டால் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாக காா்த்திகேயன் கூறியிருந்தாராம்.

இந்நிலையில், தோ்வு முடிவு பட்டியலில் ரேவந்த் பெயா் இடம்பெறாததால், பணத்தை திருப்பிக் கேட்டபோது ரூ. 15 லட்சத்துக்கு 2 காசோலைகளை தந்துள்ளாா் காா்த்திகேயன். வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என காசோலை திரும்பிவிட்டதாம்.

இதையடுத்து, ரேவந்த், காா்த்திகேயனிடம் பணத்தை பலமுறை கேட்டும், அவா் தராததால், காா்த்திகேயன் மீது ரேவந்த் காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.