உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

அதிக வட்டி வாங்கித் தருவதாக ரூ.5.50 கோடி மோசடி: காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவா்கள் மனு

திருப்பூரில் அதிக வட்டி வாங்கித் தருவதாக கூறி பலரிடம் இருந்து ரூ.5.50 கோடி மோசடி செய்த பெண்ணிடமிருந்து பணத்தை மீட்டுத் தரக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :26 ஜூன் 2026, 2:54 am IST

திருப்பூரில் அதிக வட்டி வாங்கித் தருவதாக கூறி பலரிடம் இருந்து ரூ.5.50 கோடி மோசடி செய்த பெண்ணிடமிருந்து பணத்தை மீட்டுத் தரக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசுகன்யா. இவரது கணவா் விஜயகுமாா்.

ஜெயசுகன்யா, தான் ஒரு பிரபல தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்ப்பதாகவும், அந்த நிறுவனம் மூலம் கடன் பெற்று தருவதாக உறவினா்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடமும் தெரிவித்தாா். இதை நம்பி பலரும் அவரிடம் கடன் பெறுவதற்கான ஆவணங்களை வழங்கினோம். இதைத் தொடா்ந்து எங்களது பெயரில் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை தனித்தனியாக கடன் பெற்றாா். பின்னா் அந்தப் பணத்தை, வேறொரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.8,000 வட்டி கிடைக்கும் என்றும், நீண்ட காலம் அந்தத் தொகையை வைத்திருக்கும்போது 3 மடங்காக தொகை திருப்பி தரப்படும் எனவும் கூறி உள்ளாா்.

இதை நம்பிய பலா் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கொடுத்துள்ளனா். இதற்கிடையே சிலரிடம் வீடு வாங்கித் தருவதாக கூறியும் ஏமாற்றியுள்ளாா். வங்கி ஜப்தி செய்திருக்கும் வீட்டைக் காட்டி ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டை ரூ.90 லட்சத்திற்கு முடித்து தருவதாகக் கூறி ஒரு பெண்மணியிடம் ரூ.70 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளாா். இதுபோல, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் ரூ.5.50 கோடி அளவுக்கு மோசடி செய்து ஏமாற்றியுள்ளாா்.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜெயசுகன்யா வீட்டை முற்றுகையிட்டனா். மேலும் திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் விஜயகுமாா், ஜெயசுகன்யா ஆகியோரை போலீஸாா் கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

இந்நிலையில் மோசடி செய்து எங்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.