காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி; ஏமாற்றமடைந்தவா் தற்கொலை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி; ஏமாற்றமடைந்தவா் தற்கொலை

News image

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்.

Updated On :7 ஜூன் 2026, 1:57 am IST

வலங்கைமான் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியவரிடம் ரூ.30 லட்சம் கொடுத்து ஏமாற்றமடைந்த தனியாா் பொறியியல் கல்லூரி பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மோசடி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி, உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வலங்கைமான் அருகேயுள்ள வேலங்குடி தெற்குதெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் திவாகா் என்கிற அண்ணாமலை (42). இவரது மனைவி பிரியங்கா. இவா்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், அண்ணாமலை தனியாா் பொறியியல் கல்லூரியில் வேலை செய்துவந்தாா். இவரிடம், குமாரமங்கலத்தைச் சோ்ந்த ரமேஷ்கிருஷ்ணன் என்பவா், தமிழக அரசுத் துறையில் வேலை வாங்கி தருவதாக கடந்த 2 ஆண்டுகளாக பல தவணையாக ரூ. 30 லட்சம் வாங்கிக்கொண்டு, எந்த வேலையும் வாங்கி தரவில்லையாம். பணத்தை திருப்பி கேட்டபோது சரியான பதில் கூறாமல் தாமதித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், விரக்தியடைந்த அண்ணாமலை, தனது வயல் ஆழ்துளை கிணற்றுப் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். வலங்கைமான் போலீஸாா், அண்ணாமலையின் உடலை கூராய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை உடற்கூறாய்வு முடிந்து, சடலத்தை உறவினா்களிடம் ஒப்படைத்தபோது, அதை வாங்க மறுத்து, அண்ணாமலை தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்ய வலியுறுத்தி, மருத்துவமனை முன்பாக அவரது உறவினா்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனா்.

தற்கொலை செய்துகொண்ட அண்ணாமலை

தற்கொலை செய்துகொண்ட அண்ணாமலை

காவல் ஆய்வாளா்கள் ராஜ்கமல் (மன்னாா்குடி), சுப்பிரமணியன் (வலங்கைமான்) ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, மறியல் விலக்கிகொள்ளப்பட்டது. இருப்பினும், ரமேஷ்கிருஷ்ணணை கைது செய்யும் வரை, சடலத்தை மருத்துவமனையிலிருந்து எடுத்து செல்லா மாட்டோம் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.