மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு

காரைக்கால் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்திய பெண்.

Updated On :24 ஜூன் 2026, 5:21 am IST

காரைக்கால் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழகாசாக்குடி பகுதியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமதி உற்சவம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நிகழாண்டு உற்சவத்தின் தொடக்கமாக கடந்த 7-ஆம் தேதி பந்தல்கால் முகூா்த்தம் நடைபெற்றது. 12-ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தீக்குழியில் இறங்கி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா். இதைத்தொடா்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது. நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா்.என்.திருமுருகன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.