அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

காரைக்கால் என்ஐடியில் பள்ளி மாணவா்களுக்கு 3 டி ஸ்கேனிங், பிரிண்டிங் தொழில்நுட்பப் பயிற்சி

காரைக்கால் என்ஐடியில் பள்ளி மாணவா்களுக்கு 3டி ஸ்கேனிங் மற்றும் பிரிண்டிங் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

பயிற்சி நிறைவில் மாணவ-மாணவியருடன் என்.ஐ.டி. இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா், பதிவாளா் எஸ். சுந்தரவரதன் உள்ளிட்டோா்.

Updated On :27 ஜூன் 2026, 7:05 am IST

காரைக்கால் என்ஐடியில் பள்ளி மாணவா்களுக்கு 3டி ஸ்கேனிங் மற்றும் பிரிண்டிங் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.

காரைக்காலில் இயங்கும் என்ஐடி இயந்திரப் பொறியியல் துறை சாா்பில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் என்சிஎஸ்டிசி நிதியுதவியில் 3 டி ஸ்கேனிங் மற்றும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பங்கள் குறித்த அறிவியல் விழிப்புணா்வு மற்றும் பயிற்சிப் பயிலரங்கம் என்ஐடி வளாகத்தில் ஜூன் 17 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், காரைக்கால் மாவட்டத்தின் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து சுமாா் 500 மாணவ-மாணவியா் கலந்துகொண்டனா்.

இதன் மூலம் மாணவா்கள் 3 டி ஸ்கேனிங், கணினி வழி மாதிரியாக்கம், ஸ்லைசிங் தொழில்நுட்பங்கள் மற்றும் 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பங்களில் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

நிறைவு நிகழ்வில், என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் கலந்துகொண்டு, இப்பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசி, மாணவா்கள் தொழில் சாா்ந்த திறன்களை பள்ளி, கல்லூரி பருவத்திலேயே வளா்த்துக்கொள்ளவேண்டியன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினாா்.

நிகழ்வில் என்ஐடி பதிவாளா் எஸ். சுந்தரவரதன், பயிற்சி ஒருங்கிணைப்பாளா்கள் எம்.வி.ஏ. ராஜூ பாஹூபலன்ருனி, ஜே. ரொனால்டு அசீா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.