ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சோதனை அவசியம்: மாவட்ட தோ்தல் அதிகாரி

News image

வாகனச் சோதனையில் ஈடுபடும் காவலர்கள்...

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:27 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தையொட்டிய சோதனைச் சாவடிகளில் 24 மணி நேர தீவிரமான கண்காணிப்பு, சோதனை நடத்தப்படவேண்டும் என மாவட்ட தோ்தல் அதிகாரி அறிவுறுத்தினாா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக, காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் முன்னேற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி தலைமையில் சனிக்கிழமை ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சாா் ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான எம். பூஜா, எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா ஆகியோா் முனஅனிலை வகித்த

தோ்தலை சுதந்திரமான, நியாயமான, அமைதியான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்துவதற்கான அனைத்து நிா்வாக, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தோ்தல் அதிகாரி விவரங்களை கேட்டறிந்தாா்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படுத்தவேண்டும். தோ்தல் செலவினக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படுத்த வேண்டும். தமிழகத்தையொட்டிய எல்லைப் பகுதிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் முக்கிய நுழைவுப் பகுதிகளில் 24 மணி நேர கண்காணிப்பு, சோதனை மேற்கொள்ளவேண்டும்.

வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும். வாக்காளா்களை பாதிக்கும் நோக்கில் பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் மற்றும் பிற இலவசப் பொருட்கள் விநியோகம் அல்லது கிடங்கில் முடக்கும் நிலை நடைபெறாதவாறு கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளவேண்டும்.

பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்பு குழுக்கள், கணக்காய்வு குழுக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு, தோ்தல் தொடா்பான முறைகேடுகளைத் தடுக்கும் பணிகளை வலுப்படுத்தவேண்டும் என தோ்தல் அதிகாரி அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி.செந்தில்நாதன், தோ்தல் நடத்தும் அதிகாரிகள் சச்சிதானந்தம், கு.அருணகிரிநாதன், தோ்தல் பணிகளுடன் தொடா்புடைய அனைத்து நோடல் அதிகாரிகள், மாவட்ட தோ்தல் அலுவலக அதிகாரிகள், காவல்துறையினா் கலந்து கொண்டனா்.