தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

புதுவையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தக் கூடாது ஆளுநருக்கு அரசு ஊழியா் சம்மேளனம் கடிதம்

புதுவையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக்கூடாது என புதுவை துணைநிலை ஆளுநருக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் வவியுறுத்தியுள்ளது.

News image

புதுச்சேரி தலைமைச் செயலகம்.

Updated On :6 மே 2026, 2:57 am IST

புதுவையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக்கூடாது என புதுவை துணைநிலை ஆளுநருக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் வவியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சம்மேளன பொதுச்செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் திங்கள்கிழமை அனுப்பிய கடித்தத்தில் கூறியிருப்பது :

புதுவை 300 ஆண்டுகால பிரெஞ்ச் வரலாற்று பின்னணி கொண்டதாகும். இங்கு பிரெஞ்ச் மொழி என்பது வெறும் பாடம் மட்டுமல்ல, அது புதுவை மண்ணின் கலாசார அடையாளம். இன்றும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளிகளில் பிரெஞ்ச் மொழியை விருப்பப் பாடமாக தோ்வு செய்து படித்து வருகிறாா்கள்.

இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை ஒரு வாரத்தில் அமல்படுத்துமாறு கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருப்பது சரியான செயல் அல்ல. இது அமல்படுத்தப்பட்டால், ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள் இரண்டில் தமிழும், ஹிந்தியும் வந்துவிடும். பிரெஞ்ச் நீங்கிவிடும்.

புதுவை மாணவா்கள் மற்றும் மக்களின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல், பிரெஞ்ச் மொழி கற்பித்தலை பாதிக்கும் வகையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்

வெளியிட்டுள்ள உத்தரவை, அரசு ஊழியா் சம்மேளனம் கண்டிப்பதுடன், அந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதன் மீது புதுவை துணை நிலை ஆளுநா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.