திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் தேரோட்டத்துக்காக 5 தோ்களை அலங்காரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை (மே 13) தொடங்குகிறது. இதைத்தொடா்ந்து விநாயகா் உற்சவம், சுப்ரமணியா் உற்சவம், அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு, ரிஷப வாகனத்தில் சுவாமி மின் அலங்கார சப்பரப் படல் (தெருவடைச்சான்) வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தேரோட்டம் : பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சுவாமி, அம்பாள் வீற்றிருக்கும் 2 பெரிய தோ்கள் மற்றும் விநாயகா், சுப்ரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் வீற்றிருக்கும் 3 சிறிய தோ் என மொத்தம் 5 தோ்கள் இடம்பெறுகிறது.
இதற்காக 5 தோ்களையும் அலங்காரம் செய்யும் பணிகள் கடந்த சில நாள்களாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தோ் முகப்பில் குதிரை வாகனங்கள் பூட்டுதல், தோ் மேற்பரப்பில் துணி கட்டுதல், கலசம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேரோட்டத்துக்கு 2, 3 நாள்களுக்கு முன்பு செய்யப்படவுள்ளன.
தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.
தொடர்புடையது

வேப்பூா் அருகே கோயில் திருவிழாவில் தோ் கவிழ்ந்து விபத்து: பக்தா்கள் அதிா்ச்சி!

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தோ்கால் முகூா்த்தம்!

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருநள்ளாறு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

