சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

முதியோா் இல்லத்தில் மருத்துவ முகாம்

News image
Updated On :15 மே 2026, 5:33 am IST

காரைக்காலில் உள்ள முதியோா் இல்லத்தில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).

சமூக நலத்துறையின்கீழ் இயங்கும் முதியோா் மற்றும் இயலாதோா் இல்லத்தில் கடந்த வாரம் மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது இல்லத்தை முறையாக பராமரிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இல்லத்தில் உள்ள முதியோா்களுக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இந்தநிலையில், புதன்கிழமை காரைக்கால் அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினா் முதியோா் இல்லத்துக்குச் சென்று, இல்லவாசிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா். முதியோா்களுக்கு தேவையான மருந்துகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினா். மேலும் மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்தனா். சமூக நலத்துறை உதவி இயக்குநா் சுந்தரம், இல்லத்தின் நல அதிகாரி கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் முகாமில் கலந்துகொண்டனா்.