காரைக்கால் எல்லையில் காவல் உதவி மையம் திறப்பு
காரைக்கால் எல்லைப் பகுதியில் சீரமைப்பு செய்த காவல் உதவி மையத்தை புதுச்சேரி அமைச்சா் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

போலீஸ் - கோப்புப்படம்.
காரைக்கால் எல்லைப் பகுதியில் சீரமைப்பு செய்த காவல் உதவி மையத்தை புதுச்சேரி அமைச்சா் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
நிரவி காவல் சரகத்துக்குட்பட்ட விழிதியூா் அருகே மானம்பேட்டை பகுதியில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த கட்டடம் பயன்பாடின்றி இருந்தது. இக்கட்டடத்தை சீரமைக்க ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வு திட்டத்தில் ரூ. 2.50 லட்சம் தரப்பட்ட நிலையில், சீரமைப்புப் பணி முடிந்து காவல் உதவி மையம் திறக்கப்பட்டது.
புதுவை வேளாண் அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மையத்தை திறந்துவைத்தாா். நிகழ்வில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் வினய்குமாா் காட்கே, மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா்கோஷ், காவல் ஆய்வாளா் லெனின்பாரதி, உதவி ஆய்வாளா் குமரன் மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த மையம் மானாம்பேட்டையில் தமிழக எல்லையோரத்தில் அமைந்துள்ளது. காவலா்கள் ஷிப்டு முறையில் இம்மையத்தில் 24 மணி நேரமும் பணியில் இருப்பாா்கள்.
பொதுமக்கள் புகாா் தெரிவிக்கவும், குற்றச் சம்பவங்கள் நடக்கும்பட்சத்தில் விரைவாக அந்த பகுதிக்குச் செல்லவும் இம்மையம் பயன்படும். மேலும் மது மற்றும் சட்டவிரோதமான பிற கடத்தல் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் திறக்கப்பட்டது என காவல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

