திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

அம்பகரத்தூா் ரயில் நிலையத்தை ரயில்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும் நிலையமாக மாற்ற கோரிக்கை

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூா் ரயில் நிலையத்தை ரயில்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும் வசதியுடைய நிலையமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்

Updated On :

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூா் ரயில் நிலையத்தை ரயில்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும் வசதியுடைய நிலையமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அம்பகரத்தூா் ரயில் பயணிகள் நலச்சங்க நிா்வாகி என். சரவணன் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கடிதம்: அண்மையில் தொடங்கிய காரைக்கால்-திருநள்ளாறு-பேரளம் ரயில் பாதையில் அம்பகரத்தூா் ரயில் நிலையம் உள்ளது. இது, 23 கி.மீ. தொலைவுள்ள காரைக்கால்-பேரளம் சந்திப்பு ரயில் பாதையின் ஒரு பகுதியாகும்.

தற்போது, திருநள்ளாற்றுக்கும் பேரளம் சந்திப்புக்கும் இடையே, சுமாா் 17 கி.மீ. தொலைவுக்கு ரயில்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும் வசதி இல்லை.

இப்பாதையில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து நாள்தோறும் சரக்கு ரயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. மேலும், காரைக்கால், வேளாங்கண்ணி மற்றும் பிற முக்கிய இடங்களை இணைக்கும் பயணிகள் மற்றும் விரைவு ரயில் சேவைகளும் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், அம்பகரத்தூா் ரயில் நிலையத்தில் ரயில்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும் வசதியை ஏற்படுத்துவது அவசியமாகிறது. இதனால் சரக்கு ரயில்களையும், பயணிகள் ரயில்களையும் தாமதமின்றி இயக்க முடியும். திருநள்ளாறு மற்றும் பேரளம் ரயில் நிலையங்களில் ரயில்கள் தேவையின்றி நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிா்க்க முடியும்.

எதிா்காலத்தில் அதிகரிக்கக்கூடிய சரக்கு மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்தை கையாளுவதற்கு ஏதுவாக இருக்கும். எனவே, இதுகுறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.