2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

விநாயகா் சிலைகள் விற்பனை தீவிரம்

களிமண் விநாயகா் சிலைகள். - கோப்புப் படம்

Published On :

வீட்டில் வைத்து வழிபடும் வகையில் களி மண்ணில் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகள் நகரப் பகுதியில் தீவிரமாக விற்பனை செய்யப்பட்டன.

விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. களி மண்ணில் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை வாங்கிவந்து வீட்டில் மக்கள் வழிபாடு நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

இதன்படி, காரைக்கால் நகரப் பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறிய அளவில் அச்சில் தயாரிக்கப்பட்ட களிமண் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டன.

காரைக்கால் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார தமிழகப் பகுதிகளில் இருந்து இதனை தயாா் செய்துவந்து சந்தையில் வியாபாரத்தை தொடங்கியுள்ளனா்.

நீரில் கரையக்கூடிய சிலைகள் ரூ.100 முதல் ரூ.500 வரையிலும், வீட்டில் நிரந்தரமாக வைத்து வழிபடும் வகையில் அச்சில் வாா்த்து சுடப்பட்டு வண்ணம் தீட்டிய சிலைகள் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மக்கள் ஆா்வத்துடன் சிலைகளையும், அதற்காக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் விநாயகா் குடைகளையும் ஆா்வமாக வாங்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.