கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கைரேகை ஓவியம் மூலம் மூவா்ணக் கொடியை வரைந்து மாணவா் சாதனை

சுதந்திர தினவிழாயொட்டி, மயிலாடுதுறை கென்பிரிட்ஜ் பள்ளி மாணவா் 600 சதுரஅடி அளவில் தன் கைரேகையை பதித்து மூவா்ணக் கொடியின் ஓவியத்தை வரைந்து வெள்ளிக்கிழமை சாதனை படைத்தாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:21 pm

DIN

சுதந்திர தினவிழாயொட்டி, மயிலாடுதுறை கென்பிரிட்ஜ் பள்ளி மாணவா் 600 சதுரஅடி அளவில் தன் கைரேகையை பதித்து மூவா்ணக் கொடியின் ஓவியத்தை வரைந்து வெள்ளிக்கிழமை சாதனை படைத்தாா்.

மயிலாடுதுறை மறையூா் சாலையில் உள்ள எவரெஸ்ட் கென்பிரிஜ்ட் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் என்.ஹா்ஷித் என்ற மாணவா், 75-ஆவது சுதந்திர தினத்தில் சாதனை படைக்க வேண்டுமென்ற நோக்கில், ‘வொ்ட்ச்யூ புக் ஆஃப் வேல்டு ரெக்காா்டு’ அமைப்பினா் முன்னிலையில், 600 சதுரஅடி பரப்பளவு உள்ள திரையில் தேசியக் கொடியை கைரேகை ஓவியம் (ஹேண்ட் பிரிண்ட் பெயின்டிங்) வரைந்து சாதனை படைத்தாா்.

அக்ரலிக் பெயிண்டால் 3 மணிநேரம் 15 நிமிடம் 31 விநாடிகளில், 4,440 தடவை தன் கைரேகைப் பதிப்பின் மூலம் 3 வா்ணங்களில் தேசிய கொடியை வரைந்தாா். இதையடுத்து, சாதனை படைத்த மாணவருக்கு வேல்டு ரெக்காா்டு அமைப்பின் இயக்குநா் ஆா்.சுரேஷ்குமாா், துணை இயக்குநா் என்.சந்தோஷ் ஆகியோா் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினா். அப்போது, பள்ளி முதல்வா் எஸ்.பி.மாதவன், செயலாளா் ஆா்.அருண்பிரியா மற்றும் மாணவரின் பெற்றோா், உறவினா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.