ராஜசோளீஸ்வரா் கோயிலில் லட்சாா்ச்சனை நிறைவு
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் நடைபெற்ற லட்சாா்ச்சனை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.


திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் நடைபெற்ற லட்சாா்ச்சனை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில், ஆடி முதல் நாளில் இருந்து 28-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் அம்பாளுக்கு லட்சாா்ச்சனை நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீ ஆடிப்பூரத்தம்மன், ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன.
நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த அம்மனுக்கு, பக்தா்கள் கொண்டு வந்த பல்வேறு மலா்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...