சீர்காழி பகுதியில் தொடர்ந்து கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வடமாநில கொள்ளையர்கள் இப்பகுதியில் முகாமிட்டு தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சீர்காழி தென்பாதி சபரி நகரை சேர்ந்தவர் சின்னதம்பி .இவர் நேற்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் நேற்று நள்ளிரவு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து பீரோவில் இருந்த ரூபாய் 10 ஆயிரம் ரொக்கப்பணம், மற்றும் துணிகள் அனைத்தையும் அள்ளி கொள்ளையர்கள் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சின்னத்தம்பி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல் அருகிலுள்ள தென்பாதி நாதன் நகரை சேர்ந்தவர் அரவிந்தன் (40)இவரும் குடும்பத்துடன் பழையபாளையம் கிராமத்திற்கு சென்று உள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் இவரின் வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டில் பீரோவை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்து எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதையும் படிக்க- இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: வழிபடும் முறை
குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பிய அரவிந்தன் வீடு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அரவிந்தன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சீர்காழியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இதுபோல் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரத்திற்கு முன்பு சட்டநாதபுரம் பகுதியில் மளிகை கடையை உடைத்து ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் அருகில் இருந்த இரும்பு கடையில் புகுந்து ரூபாய் 25 ஆயிரம் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் உடைத்து தப்பியுள்ளனர். இதேபோல் சட்டநாதபுரம் பகுதியில் புறவழிச்சாலை பகுதியில் மாலை நேரங்களில் சாலை வழியாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி போன்ற சம்பவம் நடந்துள்ளது.

சீர்காழி சேர்ந்த திமுக பிரமுகரின் சகோதரி நடந்து சென்றபோது அவரது கையிலிருந்த தங்க வளையலை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வழிப்பறி செய்ய முயன்றுள்ளார். அவர் சுதாகரித்துக் கொண்டதால் அவர் வைத்திருந்த செல்போனை மட்டும் பிடுங்கி கொண்டு கொள்ளையர்கள் தப்பி உள்ள சம்பவம் நடந்துள்ளது. சீர்காழியில் இதுபோன்று குற்றச்செயல்களில் வடமாநில கொள்ளையர்கள் தான் துணிச்சலாக ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி சீர்காழி பகுதியில் வட மாநில பொருட்கள் விற்பனை செய்வதுபோல் நோட்டமிடும், நபர்களையும் அவர்களின் முகவரி, ஆதார் போன்ற விவரங்களை சேகரித்து அவர்களை கண்காணிக்கவும் பொதுமக்கள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே சீர்காழி பகுதியில் பிளாஸ்டிக் நாற்காலிகள் விற்பனை செய்து வந்த வட மாநில இளைஞர்களை வியாபாரிகள் முற்றுகையிட்டு விற்பனை செய்யக்கூடாது என்று திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீர்காழி நகரில் புதிய, பழைய பேருந்து நிலையம் விளந்திட சமுத்திரம், தென்பாதி உள்ளிட்ட பிரதான பகுதிகளில் சாலையோரம் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பிளாஸ்டிக் நாற்காலி ஆகியவைகளின் வைத்து கடந்த சில நாட்களாக விற்பனை செய்து வருகின்றனர். அதுபோல் விற்பனை செய்து வந்த இளைஞர்களை சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நலச்சங்க தலைவர் பாபு விஜயன், வர்த்தக நலசங்கத் தலைவர் கோபு, ரயில் பயணிகள் சங்க செயலாளர் முஸ்தபா, தமிழர் தேசிய பேரவை ஒருங்கிணைப்பாளர் அரவிந்தன் மற்றும் வியாபாரிகள் முற்றுகையிட்டு இதுபோன்று நகர் பகுதியில் பொதுவான இடங்களில் அனுமதியின்றி பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் தரம் குறைந்த இது போன்ற பொருட்களால் பொது மக்கள் ஏமாற்றப் படுவதாகவும் இதனால் மற்ற வியாபாரிகள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி வாக்குவாதம் செய்து அவர்களை திருப்பி அனுப்பினர்.
இதனை தொடர்ந்து வட மாநிலத்தவர்கள் கொண்டுவந்த பிளாஸ்டிக் நாற்காலி போன்ற பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு திரும்பிச் சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெய்வேலியில் திமுக-அதிமுக நேரடி பலப்பரீட்சை...!

கள்ளக்குறிச்சியில் நான்காவது வெற்றி முனைப்பில் அதிமுக!

ஆற்காடு தொகுதி அலசல்: ஹாட்ரிக் வெற்றியை எதிா்நோக்கும் திமுக

அவா்தான் நான்; நான்தான் அவா்: 7 தொகுதிகளில் ஒரே பெயரில் வேட்பாளா்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


