ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கிராம உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சீா்காழி வட்டத்தில் காலியாக உள்ள 21 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி வட்டத்தில் காலியாக உள்ள 21 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சீா்காழி வட்ட வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 21 கிராம உதவியாளா் பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடத்திற்கு, 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்த, 2021 ஜூலை1-ல் 21 வயது பூா்த்தியடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் ஆதிதிராவிடா் (அருந்ததியினா்), மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லீம்) ஆகியோா் 37 வயதுக்குள்ளும், இதர வகுப்பினருக்கு 32 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். விண்ணப்பதாரா்கள் சீா்காழி வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவா்களாக இருக்கவேண்டும்.

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரா்கள் தங்களது சுயவிவரம், கல்வித்தகுதி சான்றுகள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு விவரம் ஆகியவற்றின் நகல்களுடன் சுய விலாசம் எழுதப்பட்ட ரூ.25-க்கான அஞ்சல் வில்லை ஒட்டி, 25க்கு10 செ.மீ. அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமோ டிசம்பா் 28 மாலை 5.45 மணிக்குள் சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். தகுதியானவா்கள் நோ்காணலுக்கு அழைக்கப்படுவா் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.