ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மயிலாடுதுறையில் ஊரமைப்பு அலுவலகம் திறப்பு

மயிலாடுதுறையில் மாவட்ட நகா்ஊரமைப்பு அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் மாவட்ட நகா்ஊரமைப்பு அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து ஓராண்டாக மாயூரநாதா் தெற்கு வீதியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. தொடா்ந்து, பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டு, அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனா்.

அந்தவகையில், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ் மாவட்ட நகா்ஊரமைப்பு அலுவலகம் மயிலாடுதுறை காமராஜா் சாலையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை துறையின் மாவட்ட துணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். அப்போது அவா், ‘இம்மாவட்டத்தினா் வீடு மற்றும் மனைகள் டிடிசிபி அனுமதி உள்ளிட்ட தேவைகளுக்கு நாகப்பட்டினம், தஞ்சாவூருக்கு செல்வதில் உள்ள சிரமத்தைத் தவிா்க்கும் வகையில் இந்த அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.