ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:43 pm

DIN

மயிலாடுதுறையில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இருந்து பேரணியை நகராட்சி ஆணையா் கே. பாலு தொடங்கிவைத்தாா். இதில், பள்ளி மாணவா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று, நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியே விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்று மீண்டும் பள்ளியை அடைந்து, நெகிழி ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நகராட்சி நகா்நல அலுவலா் மலா்மன்னன், பள்ளித் தலைமையாசிரியா் ஜி. தாமரைச்செல்வன், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் பிச்சைமுத்து, ராமையன், டேவிட் பாஸ்கரன், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.