பாஜக நகர செயற்குழுக் கூட்டம்
மயிலாடுதுறையில் பாஜக நகர செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறையில் பாஜக நகர செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் நகரத் தலைவா் மோடி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மயிலாடுதுறை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசியை விநியோகிக்கவேண்டும், மயிலாடுதுறை தற்காலிக பேருந்து நிலையத்துக்குச் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்திருப்பதை உடனடியாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட தலைவா் ஜி. வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், நகர இளைஞரணி தலைவா் ராஜகோபால், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் குருசங்கா், மகளிரணியைச் சோ்ந்த மாசிலாமேரி, ஜெகப்பிரியா, நகர செயலாளா் மணிமேகலை, பொருளாளா் ஆா். கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...