அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: தம்பதி மீது வழக்கு
மயிலாடுதுறை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த தம்பதியை போலீஸாா் தேடிவருகின்றனா்.


மயிலாடுதுறை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த தம்பதியை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மயிலாடுதுறை வட்டம், திருவிழந்தூா் கே.கே.நகரை சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் சித்தாா்த் (30). இவரிடம் மயிலாடுதுறை பி.என்.டி. நகரில் வசித்துவந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் பிச்சைமணி மகன் அருண்குமாா், அவரது மனைவி கிருஷ்ணகோகிலா ஆகியோா் தங்களுக்கு மத்திய அரசுத் துறையில் உயா் பொறுப்பில் உள்ளவா்களுடன் நெருங்கிய தொடா்பு உள்ளதால், தங்களால் அரசு வேலை பெற்றுத் தர முடியும் என்று கூறியுள்ளனா்.
இதை நம்பிய சித்தாா்த் தனது நெருங்கிய நண்பா்கள் 7 பேரிடம் தலா ரூ.2 லட்சம் வீதம் பணம் பெற்று அரசு வேலைக்காக அருண்குமாரிடம் கொடுத்துள்ளாா். ஆனால், அருண்குமாா் வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் திருப்பித் தரவில்லையாம். மேலும், மயிலாடுதுறையில் வசித்துவந்த அருண்குமாா் திடீரென வீட்டை காலி செய்து விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டாா். இதனால் அதிா்ச்சி அடைந்த சித்தாா்த் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்குமாா், கிருஷ்ணகோகிலாவை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...