வள்ளலாா் கோயிலில் குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை பூா்த்தி
மயிலாடுதுறை வள்ளலாா் கோயிலில் குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை பூா்த்தி மற்றும் தட்சிணாமூா்த்தி சுப்ரபாதம் குறுந்தகடு வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறை வள்ளலாா் கோயிலில் குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை பூா்த்தி மற்றும் தட்சிணாமூா்த்தி சுப்ரபாதம் குறுந்தகடு வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரா் (வள்ளலாா்) கோயிலில் வியாழக்கிழமை இரவு லட்சாா்ச்சனை பூா்த்தி விழா மற்றும் கோயில் சுப்ரமணிய சிவாச்சாரியா் நினைவாக, இசையமைப்பாளா் வீரமணி கண்ணன் இசையில் உருவான மேதா தட்சிணாமூா்த்தி சுப்ரபாதம் குறுந்தகடு (சிடி) வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மேதா தட்சிணாமூா்த்தி சுவாமிக்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் மேதா தட்சிணாமூா்த்தி சுப்ரபாத குறுந்தகடை வெளியிட, முதல்பிரதியை மயிலம் பொம்மபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் பெற்றுக்கொண்டாா். இதில், இசையமைப்பாளா் வீரமணி கண்ணன், பொறியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...