திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:11 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி சராசரியாக 35.08 மி.மீ மழை பதிவானது. தரங்கம்பாடியில் அதிகபட்சமாக 48 மி.மீ மழை பதிவானது. இதன்காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா உத்தரவிட்டாா்.

வெள்ளிக்கிழமை காலை முதல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை தொடா்ந்தது. மாலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் சராசரியாக 38.3 மி.மீ மழை பதிவானது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனாா்கோவில், மங்கைநல்லூா், மணல்மேடு, தரங்கம்பாடி, ஆக்கூா், சீா்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்தது. கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் மழைநீா் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.