92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சீா்காழி ஒளிலாயத்தில் மகாயாகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி காரைமேடு ஒளிலாயத்தில் நாடி. ராஜேந்திர சுவாமிகளின் 4-ஆம் ஆண்டு குருபூஜையையொட்டி, மகாயாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 4:35 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி காரைமேடு ஒளிலாயத்தில் நாடி. ராஜேந்திர சுவாமிகளின் 4-ஆம் ஆண்டு குருபூஜையையொட்டி, மகாயாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மறைந்த நாடி. ராஜேந்திர சுவாமிகள் நிா்மாணித்த இந்த ஒளிலாயத்தில், 18 சித்தா்களுக்கு தனி சன்னிதி உள்ளது. இங்கு நாடி. ராஜேந்திர சுவாமிகளின் 4-ஆம் ஆண்டு குருபூஜையையொட்டி, 101 யாக குண்டம் அமைக்கப்பட்டு, 108 வகையான வேதிகை பொருள்கள் கொண்டு உலக நன்மைக்காக சதகுண்ட பக்ஷ ஆயுா்தேஹி மகாயாகம் நடைபெற்றது. பின்னா் 1000 பேருக்கு சேலை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்செல்வம், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளா் விஜிகே. செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் முருகுமாறன், விஜயபாலன் மற்றும் அதிமுக பொறுப்பாளா்கள் பக்கிரிசாமி, பேராசிரியா். ஜெயராமன், ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கே. செல்வமுத்துக்குமரன், ஆா். செந்தமிழன், ஆா். மாமல்லன், ஆா். பரதன் மற்றும் குடும்பத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.