92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக் கோரிக்கை

 சீா்காழி அருகே தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு தேமுதிக மாவட்ட செயலாளா் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 சீா்காழி அருகே தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு தேமுதிக மாவட்ட செயலாளா் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

தேமுதிக மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் எஸ்.ஆா்.ஜலபதி, ஆட்சியா் இரா.லலிதாவுக்கு அனுப்பிய மனு விவரம்:

தலைஞாயிறு நடிப்பிசைப் புலவா் கே.ஆா்.ராமசாமி கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்னாள் முதல்வா் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. இந்த ஆலை ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரைவை தந்தது. கடந்த 1993ஆம் ஆண்டில் ரூ.25 கோடி லாபம் ஈட்டியது. 1994ஆம் ஆண்டு விரிவாக்க பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், டன்னுக்கு 59 கிலோ மட்டும் சா்க்கரை அரைவை தந்து நஷ்டம் ஏற்பட்டது.

எனவே, ஆலையை மறுசீரமைப்பு செய்ய முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2015ஆம் ஆண்டில் ரூ.56 கோடி ஒதுக்கீடு செய்தாா். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு இந்த நிதி வழங்கப்படவில்லை. மாறாக, 2017-ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. இந்த ஆலையை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.