எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களுக்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம்
வரைமுறையற்ற எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களை தடுத்து நிறுத்த கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்


வரைமுறையற்ற எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களை தடுத்து நிறுத்த கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் காவிரிப் படுகையும், கடலோரக் கிராமங்களும், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூா் மாவட்டங்களும் வரைமுறையற்ற எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களாலும், எரிவாயுக் குழாய்ப் பதிப்பாலும் ஒட்டுமொத்த அழிப்புக்கு உள்ளாக இருக்கின்றன. மரக்காணத்தில் இருந்து நாகை மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் வரை கடற்பகுதியிலும் எண்ணெய்-எரிவாயு ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் ஏலம் எடுத்துவிட்டு காத்திருக்கின்றன. எனவே, இத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த அக்டோபா் 2-ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...