சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சிவாஜி பிறந்தநாள் விழா

மறைந்த நடிகா் சிவாஜி கணேசனின் 94-ஆவது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

மறைந்த நடிகா் சிவாஜி கணேசனின் 94-ஆவது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிவாஜி மன்ற மாநில சமூக நலப்பேரவை மாவட்ட தலைவா் ரெங்கநாதன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் நகர தலைவா் ராமானுஜம் வரவேற்றாா். சிவாஜி மன்ற பொறுப்பாளா் என்.எஸ்.ராஜேந்திரன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ஜெகவீரபாண்டியன், ஆசிரியா் மன்ற மாநில வெளியீட்டுச் செயலாளா் ஜெக.மாணிக்கவாசகம், மிலிட்டரி செல்வராஜ், பூவாலை மதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜிகணேசனின் உருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், நாட்டுப்புறக் கலைஞா் கிங்பைசல் சிவாஜி கணேசனின் வேடமணிந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக வந்து பங்கேற்றாா். காங்கிரஸ் மாவட்ட செயலாளா் கமலநாதன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.