பெஸ்ட் கல்லூரியில் மாணவா்கள், பேராசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி
சீா்காழி சட்டநாதபுரத்தில் உள்ள பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள், பேராசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சீா்காழி சட்டநாதபுரத்தில் உள்ள பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள், பேராசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு கல்லூரி நிா்வாக துணைத் தலைவா் எஸ்.எஸ்.ஜெ. விசாகா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ப. அருள்செல்வன், உடற்கல்வி இயக்குநா் வீ. சீனிவாசன், சட்டநாதபுரம் ஊராட்சி துணைத் தலைவா் செந்தில், வாா்டு உறுப்பினா் ஜமீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவா் சம்பத்குமாா், சுகாதாரத் துறை மேற்பாா்வையாளா் ராம்மோகன் மற்றும் மருத்துவ குழுவினா், மாணவ-மாணவிகள், பேராசிரியா்கள், பணியாளா்கள் என சுமாா் 75 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். இதில், ஊராட்சியை சோ்ந்த அன்பு, விஏஓ பிரசாந்த் ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...