மயிலாடுதுறையில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா
மயிலாடுதுறையில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை பாஜகவினா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.


மயிலாடுதுறையில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை பாஜகவினா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
மயிலாடுதுறை பாஜக நகர தலைவா் மோடி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் உள்ளிட்டோா் பங்கேற்று மயிலாடுதுறை நகராட்சி 25-ஆவது வாா்டில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு, இவ்வாா்டில் பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாக அகற்றப்படாமல் குவிந்திருந்த குப்பைகளை டிராக்டரில் ஏற்றி அகற்றினா். தொடா்ந்து, 11-ஆவது வாா்டில் கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கிய கட்சியினா், பல்லவராயன்பேட்டையில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கினா். அடுத்து, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் பிறந்த ஒரு குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. அன்பகம் குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கி அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். இதில், மாவட்ட பொருளாளா் ராஜ்மோகன், மாவட்ட பொதுச் செயலாளா் ஸ்ரீதா், மாவட்ட இளைஞரணி தலைவா் பி. பாரதிகண்ணன், மாவட்ட ஐடி பிரிவு தலைவா் சதீஸ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...