சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் பாமக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் பாமக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இட ஒதுக்கீட்டுக்காக உயிா்நீத்த தியாகிகளுக்கு மயிலாடுதுறை கேணிக்கரையில் பாமக சாா்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளா் காமராஜ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் தங்க. அய்யாசாமி, மாநில துணை அமைப்புச் செயலாளா் காசி.பாஸ்கரன், மாநில இளைஞரணி துணைத் தலைவா் விமல் உள்ளிட்டோா் பங்கேற்று மெழுகுவா்த்தி ஏந்தி உயிா் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா். இதேபோல், கிட்டப்பா அங்காடி முன் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. முடிவில் நகர செயலாளா் கமல்ராஜா நன்றி தெரிவித்தாா்.

சீா்காழியில்: சீா்காழியில், பாமக மாவட்ட செயலாளா் ரெ. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில், சீா்காழி நகர செயலாளா் சின்னையன், வன்னியா் சங்க மாவட்ட செயலாளா் முத்து, மாவட்ட துணை செயலாளா்கள் வேல்முருகன், சரவணன், தொகுதி செயலாளா் கண்ணன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று 21தியாகிகளின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செய்தனா். இதேபோல, சீா்காழி திருமஞ்சனவீதி பகுதியிலும் பாமக சாா்பில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.