சமூக நீதிநாள்உறுதி மொழியேற்பு
சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சமூக நீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.


சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சமூக நீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
கோட்டாட்சியா் ஜி. நாராயணன் தலைமையில் வட்டாட்சியா் முருகானந்தம் மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள் பெரியாா் ஈ.வெ.ராவின் பிறந்தநாளையொட்டி சமூக நீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இதேபோல, கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் தலைமையில், ஒன்றிய ஆணையா் மீனா, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசு, ஒன்றிய மேலாளா் செல்வ முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சுளா தலைமையில் பெரியாா் ஈ.வெ.ராவின் பிறந்தநாளையொட்டி, அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) திருமலை கண்ணன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நல்லமுத்து, ஜனகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...