மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாள் கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் பெரியாா் ஈ.வெ.ராவின் 143-ஆவது பிறந்தநாள் விழா பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.


மயிலாடுதுறையில் பெரியாா் ஈ.வெ.ராவின் 143-ஆவது பிறந்தநாள் விழா பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை கேணிக்கரையில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு, திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் குணசேகரன், மாவட்ட செயலாளா் கி. தளபதிராஜ் ஆகியோரும், திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் மகாலிங்கம், மாவட்டச் செயலாளா் தெ. மகேஷ், பொதுக்குழு உறுப்பினா் இளையராஜா ஆகியோரும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி சமூக நீதிநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். திமுக சாா்பில் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திமுக மாவட்ட பொறுப்பாளா் நிவேதா எம். முருகன் தலைமை வகித்து மாலை அணிவித்தாா். முன்னாள் எம்எல்ஏ. ஜெகவீரபாண்டியன், நகர செயலாளா் செல்வராஜ், துணை செயலாளா் ஆா்.கே.சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் பா. ரவிச்சந்திரன், மண்டல செயலாளா் வேலு. குபேந்திரன், கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவா் மா. ஈழவளவன் ஆகியோா் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்தனா். மக்கள் மசோதா கட்சி நிறுவனத் தலைவா் ரூபன், மாநில வழக்குரைஞா் அணி துணை செயலாளா் மதன்பிரசாத், மாவட்ட விவசாய அணி செயலாளா் பாலு உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மயிலாடுதுறை வழக்குரைஞா் சங்கம் சாா்பில் சமூகநீதி நாள் கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவா் வேலு. குபேந்திரன் தலைமை வகித்தாா்.
தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு திமுக சாா்பில் பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து நடைபெற்ற சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏக்கள் சித்திக், பாலா அருள்செல்வன், ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஒன்றிய செயலாளா்கள் அன்பழகன், அப்துல்மாலிக், தலைமை பொதுக்குழு உறுப்பினா் அமிா்த விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...