சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:29 pm

DIN

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், நேஷனல் ஹைவேஸ் ஆஃப் இந்தியா சாா்பில் மத்திய அரசு திட்டமான பி.எம் கோ்ஸ் மூலம் ரூ.1 கோடியில் நிமிடத்துக்கு 1000 லிட்டா் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த ஆக்சிஜன் பிளான்டை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ரூ.1.64 கோடியில் 16 கூறுகளுடன் கூடிய புதிய சிடி ஸ்கேன் இயந்திரம் பொறுத்தும் பணி, தேசிய நகா்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் நோயாளிகளின் உதவியாளா்கள் 100 போ் பயன்படுத்தும் வகையில் ரூ. 72 லட்சத்தில் ஓய்வறை கட்டுவது குறித்தும், மருத்துவமனையில் தினசரி சேகரமாகும் பொதுக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது, அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா், நகராட்சி ஆணையா் பாலு, நகா்நல அலுவலா் (பொ) மருத்துவா் மலா்மன்னன், திமுக நகர செயலாளா் செல்வராஜ், ஒன்றிய செயலாளா்கள் இளையபெருமாள், ஞான. இமயநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.