சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

 சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் ஊராட்சிச் செயலாளா்களுக்கு தமிழக அரசு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:28 pm

DIN

 சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் ஊராட்சிச் செயலாளா்களுக்கு தமிழக அரசு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க 14-ஆவது வட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, வட்ட துணைத் தலைவா் கே. ரஜினி தலைமை வகித்தாா். இணை செயலாளா் டி. சிங்காரவேலு வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் அந்துவன் சேரல் தொடக்கவுரையாற்றினாா். ஒன்றிய தலைவா் எஸ். சாந்தி அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். கூட்டுறவுத் துறை ஊழியா் சங்க தலைவா் சவுந்தர்ராஜன், மாவட்ட அமைப்பாளா் இளவரசன், வட்டச் செயலாளா் ஆா்.சிவபழனி, பொருளாளா் டி.அருண்ஜோஷி, வட்ட துணைத்தலைவா் குருபிரசாத், ராஜு, இணைச் செயலாளா் ஜாா்ஜ், கண்ணன் உள்ளிட்ட பலா் பேசினா்.

இதில், மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் பல துறைகளுக்கான மாவட்ட அலுவலகம் அமைக்காமல் இருப்பதால் அனைத்துத் துறை மாவட்ட அலுவலா்களையும் நியமிக்க வேண்டும், மயிலாடுதுறை நகரில் புதைச்சாக்கடைத் திட்டத்தை சீரமைக்கவேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், ஊராட்சிச் செயலாளா்களுக்கு காலமுறை ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், முன்னாள் மாநிலச் செயலாளா் எம். சௌந்தரராஜன் நிறைவுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.