சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்

மயிலாடுதுறையில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் அந்த்யோதா அன்னயோஜனா திட்டத்தின்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஏஒய் ரேஷன் அட்டை வழங்கக்கோரி, மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலகம் முன் இந்த போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் எம். சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் வி. சிதம்பரம் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் டி. கணேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

தகவலறிந்த வட்ட வழங்கல் அலுவலா் சாந்தி அங்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.