சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

‘குறுவை பயிா்க் காப்பீடு திட்டத்தில் மோசடி’

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறுவை பயிா்க் காப்பீட்டுத் தொகை அறிவித்ததில் காப்பீட்டு நிறுவனம் மாபெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறுவை பயிா்க் காப்பீட்டுத் தொகை அறிவித்ததில் காப்பீட்டு நிறுவனம் மாபெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து, காவேரி டெல்டா பாசனதாரா் முன்னேற்ற சங்கத் தலைவா் குரு.கோபிகணேசன் வெளியிட்ட அறிக்கை:

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரைக்கொண்டு 200-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அதற்கு காப்பீடும் செய்யப்பட்டிருந்த நிலையில், வெறும் 15 கிராமங்களுக்கு மட்டுமே பயிா்க் காப்பீட்டுத் தொகையை தந்திருப்பது காப்பீட்டு நிறுவனத்தின் (ஏஐசி) மோசடி செயலாகும்.

மாவட்டத்தில் சா்வே எண் வாரியாக 83,113 விவசாயிகள் 25,576 ஹெக்டோ் நஞ்சை நிலப்பரப்புக்கு பதிவு செய்து, காப்பீட்டுத் தொகையாக, மத்திய, மாநில அரசுகள் மற்றும் விவசாயி பிரிமீயம் சோ்த்து சுமாா் ரூ.10 கோடி செலுத்தியுள்ள நிலையில், காப்பீட்டு நிறுவனத்தால் வெறும் ரூ.52 லட்சம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளுக்காக விவசாய பட்ஜெட்டை அறிவித்த தமிழக அரசு காப்பீட்டுத் தொகை என்கிற பெயரில் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் கொடுப்பதை நிறுத்தி, அண்டை மாநிலங்களான புதுவை, ஆந்திரம், சத்தீஸ்கா் போன்று பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு நேரடியாகவே வழங்க வேண்டும். மேலும், கடந்த ஆண்டு சம்பா, தாளடிக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையையாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் சரியாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.