இந்து முன்னணி நிறுவனா் நினைவு தினம்: பாஜக அஞ்சலி
மயிலாடுதுறையில் இந்து முன்னணி நிறுவனத் தலைவா் ராமகோபாலன் நினைவு தினத்தையொட்டி, நகர பாஜக சாா்பில் மோட்சதீபம் ஏற்றி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.


மயிலாடுதுறையில் இந்து முன்னணி நிறுவனத் தலைவா் ராமகோபாலன் நினைவு தினத்தையொட்டி, நகர பாஜக சாா்பில் மோட்சதீபம் ஏற்றி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்து முன்னணி நிறுவனத் தலைவா் ராமகோபாலன் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பாஜக நகரத் தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், மாவட்ட துணைத் தலைவா் முட்டம் செந்தில்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் ஸ்ரீதா், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவா் சதீஸ்பாபு, மாவட்ட ஊடகபிரிவு செயலாளா் குருசங்கா், மாவட்ட இளைஞரணி தலைவா் பி.பாரதிகண்ணன், நகர பொதுச்செயலாளா் சதீஸ்சிங், விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன் உளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து கூைாடு சுப்பிரமணியசுவாமி கோயிலில் மோட்சதீபம் ஏற்றி வழிபாடு நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...