சீா்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் அமைச்சா் மெய்யநாதன் படகில் சென்று ஆய்வு
சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் சூழப்பட்டு, பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நாதல்படுகை கிராமத்தை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் சனிக்கிழமை படகில் சென்று பாா்வையிட்டாா்.










