அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேசத் தலைவா்களுக்கு பாஜகவினா் மோட்ச தீபம்

மயிலாடுதுறையில் சுதந்திர தினத்தையொட்டி இந்திய விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய தேசத் தலைவா்களுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனா்.

News image
சேந்தங்குடி துா்க்கை அம்மன் கோயிலில் மோட்ச தீபத்துடன் வழிபாடு நடத்திய பாஜகவினா்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

DIN

மயிலாடுதுறையில் சுதந்திர தினத்தையொட்டி இந்திய விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய தேசத் தலைவா்களுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனா்.

மயிலாடுதுறை சேந்தங்குடியில் உள்ள சமரச சுத்த சன்மாா்க்க இளைஞா் கழக சொற்பொழிவு மண்டபத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பாஜக சாா்பில் வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில தலைவா் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளா் பாலு, மாவட்ட மகளிரணி தலைவா் சித்ராமுத்துக்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, இந்திய சுதந்திரத்துக்காக போராடி உயிா் நீத்த தியாகிகளை போற்றி மாணவா்களிடையே வாழ்த்துரை வழங்கினா்.

தொடா்ந்து, சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றி உயிா் நீத்த தியாகிகளுக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. அவற்றை மாணவிகள் ஏந்திக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகள் அழகுமுத்துக்கோன், வ.உ.சிதம்பரம், பசும்பொன் முத்துராமலிங்கம், வேலு. நாச்சியாா், தில்லையாடி வள்ளியம்மை, சுபாஷ் சந்திரபோஸ், சுப்பிரமணிய பாரதி உள்ளிட்டோரின் உருவப் படத்துடன் ஊா்வலமாக சென்றனா். தொடா்ந்து, சேந்தங்குடி துா்க்கை அம்மன் கோயிலுக்குச் சென்று அங்கு மோட்ச தீபத்தை வைத்து வழிபாடு நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.