வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருமணத்திற்கு சென்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதி கணவன் மரணம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த செம்மங்குடியில் சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி ஒருவர் உயிரிழந்தார்.

News image
விபத்துக்குள்ளான வாகனம்
Updated On :6 பிப்ரவரி 2022, 9:56 am

DIN

சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி டாட்டா ஏசி கார் சென்று கொண்டிருந்தது. புதுப்பட்டிணத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி மீது எதிரே வந்த டாடா ஏசி வாகனம் மோதியது.

இதில், நிலை தடுமாறிய இரு சக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் தம்பதியினர்  படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சீர்காழி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.