

சீர்காழி அருகே கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ் பழுதாகி நடுரோட்டில் நின்றதால் சுமார் ஒரு மணி நேரம் கழித்து மாற்று ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த நிறை மாத கர்ப்பிணியான அஞ்சலிக்கு வலி ஏற்பட்டதால் திருமுல்லைவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணிப் பெண் அஞ்சலியை அழைத்துச் சென்றபோது 108 ஆம்புலன்ஸ் வழுதலைக்குடி பகுதியில் திடீரென பழுதாகி சாலையில் நின்றது.
இதனால் அஞ்சலி பெரும் அவதியடைந்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மாற்று
ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து விட்டு, சரி செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டார். ஆனால் பழுதை சரி செய்ய முடியாத காரணத்தோடு, மாற்று ஆம்புலன்ஸ் வர தாமதமானதாலும் 45 நிமிடம் கழித்து வேறொரு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
108 ஆம்புலன்ஸ் பழுதாகி சாலையில் நிற்பதும், கர்ப்பிணி பெண், அவரது உறவினர்கள் பரிதவிக்கும் காட்சி வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.