கனமழையால் பொங்கல் பானைகள் தயாரிப்புப் பணி பாதிப்பு 

சீர்காழி பகுதியில் பெய்த கனமழையால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மழைக்கால நிவாரணத்தை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டுமென மண்பாண்ட தொழிலாளர்கள் முதல்வருக்கு
பொங்கல் பானைகள் தயாரிப்புப் பணி.
பொங்கல் பானைகள் தயாரிப்புப் பணி.

சீர்காழி பகுதியில் பெய்த கனமழையால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மழைக்கால நிவாரணத்தை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டுமென மண்பாண்ட தொழிலாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட கருவி, வேட்டங்குடி ,ஆச்சாள்புரம், எடமணல், திருக்கருகாவூர், பழையபாளையம், செம்மங்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் மற்றும் மண் அடுப்புகள், மண்சட்டி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் தயார் செய்யப்படும் பொங்கல் பானை, சட்டி, அடுப்பு ஆகியவை விற்பனைக்காக வியாபாரிகள் மூலம் பல்வேறு பகுதிக்கு  விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 15 நாட்களே உள்ள நிலையில் மண் பானை, அடுப்பு, சட்டிகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதற்காக களிமண்ணைப் பதப்படுத்தி பானைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் மண்பாண்டத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பானை தயாரிக்கும் பக்குவ நிலைக்கு களிமண்ணை தயார் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு பானைகள் தயார் செய்யும் பணி தடைப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வேட்டங்குடி கிராமத்தில் பானை தயாரிக்கும் தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் மாவட்ட மண்பாண்ட தயாரிப்பு சங்கத் தலைவர் மாரிமுத்து முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், மண்பாண்டத் தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. தொடர் மழையினால் இத்தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காரணமாக பொங்களுக்கு தயாராகும் மண்பாணைகளை சுட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூண்று மாத மழையினால் மண்பாண்டத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுளர். 

முதல்வர் மண்பாண்டத் தொழிலாளர்கள் நிலை அறிந்து மழைக்கால நிவாரணமாக வழங்கப்படும் ரூ.5 ஆயிரத்தை, ரூ 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதே நிலையில் விடுபட்ட மண்பாண்டத் தொழிலாளர்களை கணக்கீடு செய்து அவர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்கவேண்டும். மேலும்  மண்பாண்டத் தொழில்கள் நலிந்து வருவதை தடுத்து மாவட்டந்தோறும் மண்பாண்டத் தொழிலை இளைஞர் கற்றுக்கொள்ள பயிற்சி கூடங்கள் அமைத்து பாரம்பரியம் மிக்க மண்பாண்டத் தொழிலை காக்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் மாரிமுத்து உதவியாக ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து அவரும் அவரது மகனும் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com