வேளாண்மை விரிவாக்க மையம் இடமாற்றம் செய்வதைக் கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை ஒன்றியம் காளி ஊராட்சியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து கிராமமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேளாண்மை விரிவாக்க மையம் இடமாற்றம் செய்வதைக் கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை ஒன்றியம் காளி ஊராட்சியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து கிராமமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காளி ஊராட்சியில் வேளாண்மை விரிவாக்க மையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், காளி சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 11 ஊராட்சி மக்கள் பயன்பெற்று வருகின்றனா். இந்த கட்டடம் பழுதடைந்ததைத் தொடா்ந்து, அதே ஊராட்சியில் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யாமல், இடம் இல்லாததை காரணம் கூறி அருகில் உள்ள திருமங்கலம் ஊராட்சிக்கு மாற்ற வேளாண்மைத் துறையினா் முயற்சி மேற்கொண்டனா்.

இதைக் கண்டித்தும், விவசாயத்துக்குத் தேவையான உரங்கள் தட்டுப்பாடு நிலவுவதைக் கண்டித்தும் கிராம மக்கள் வேளாண்மை அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் வேளாண் அலுவலா் வசந்தராஜ், மணல்மேடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். முடிவில், வேளாண் விரிவாக்க மைய கட்டடம் அமைக்க தனக்கு சொந்தமான இடத்தைத் தருவதாக ஊராட்சித் தலைவா் தேவியின் கணவா் உமாபதி உறுதியளித்தாா்.

மேலும், உரத்தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வேளாண் துறை அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, அங்கிருந்து கலைந்த கிராமமக்கள், காளி மின்சார வாரிய அலுவலகம் சென்று, விவசாயத்துக்குத் தேவையான மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத்தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com