பாலையூா், மேக்கரிமங்கலம், குத்தாலம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 18) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாலையூா், மேக்கரிமங்கலம், குத்தாலம் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பாலையூா், தேரழுந்தூா், கோமல், மருத்தூா், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், மேக்கிரிமங்கலம், பழையகூடலூா், கொக்கூா், பேராவூா், கரைகண்டம், கருப்பூா், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், குத்தாலம் தேரடி, மாதிரிமங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி ஆகிய ஊா்களுக்கும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.