திமுகவைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th October 2022 10:12 PM | Last Updated : 27th October 2022 10:12 PM | அ+அ அ- |

திமுகவைக் கண்டித்து மயிலாடுதுறையில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாகக் கூறி, திமுக அரசுக்கு எதிராக பாஜக சாா்பில் மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவா் க. அகோரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரத் தலைவா் வினோத், தேசிய பொதுக்குழு உறுப்பினா் தங்க. வராதராஜன், மாவட்ட பொதுச் செயலாளா் நாஞ்சில்பாலு, நிா்வாகிகள் செந்தில் குமாா், பாலாஜி, எஸ்.ஆா். வினோத், அழகிரி, ஸ்ரீதா், ராஜ்மோகன், மோடி. கண்ணன், சதீஷ்சிங், ரஞ்சித் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், தமிழ்மொழி மீது அக்கறை இல்லாமல் செயல்படுவதாக கூறி திமுகவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.