திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் எமசம்கார நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் புகழ்பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது.  நவகிரகங்களின் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. 
எமசம்காரத்தை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவேதாரண்யேஸ்வரர்
எமசம்காரத்தை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவேதாரண்யேஸ்வரர்
Published on
Updated on
1 min read

பூம்புகார்: மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் புகழ்பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது.  நவகிரகங்களின் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. 

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் கடந்த நான்காம் தேதி இந்திர திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை இரவு எமசம்கார நிகழ்ச்சி நடந்தது. 

எமசம்காரத்தை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் எமதர்மன்
எமசம்காரத்தை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் எமதர்மன்

முன்னொரு காலத்தில் ஸ்வேதா ராஜன் ஸ்வேதாரண்யேஸ்வரனின் பக்தனாக விளங்கினார். தினந்தோறும் சுவாமியை வழிபட்டதாகவும், ஒரு நாள் எமதர்மன் அவரை கொண்டு செல்ல முயன்ற போது, சுவேதாரண்யேஸ்வரர் எமனை எரித்து, பின்னர் அவருக்கு சாப விமோசனம் வழங்கியதாகவும் புராண வரலாறு கூறுகின்றன. அந்த நிகழ்வு திங்கள்கிழமை இரவு நடந்தது. 

எமசம்காரத்தை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவேத ராஜன்
எமசம்காரத்தை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவேத ராஜன்

இதனை ஒட்டி எமதர்மனை எரித்தலும், பின்னர் விமோசனம் அளிக்கும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடந்தது. இதனை ஆலய சிவாச்சாரியார் சங்கர் கணேஷ் குருக்கள் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி க. முருகன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com