விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 28th April 2023 10:38 PM | Last Updated : 28th April 2023 10:38 PM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு தொகையாக இதுவரை ரூ. 49.68 கோடியும், வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.51.79 கோடியும் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் பேசினாா்.
கூட்டத்தில் மொத்தம் 65 மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்டவருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சி.ஜெயபாலன், வேளாண் இணை இயக்குநா் ஜெ. சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...